Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் இந்தியாவுக்கும் படம் என்பதே பைத்தியக்காரத்தனம்… இயக்குனர் அமீர் கருத்து!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (09:11 IST)
இயக்குனர் அமீர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள ”உயிர் தமிழுக்கு” படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் பெயர் “உயிர் தமிழுக்கு” என மாற்றப்பட்டுள்ளது. மேலும் இயக்குனராக தயாரிப்பாளர் ஆதம் பாவாவே இயக்கியுள்ளதாகவும் புதிய போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர் “பான் இந்தியா படம் என்று சொல்லப்படுவதற்கு முன்பே இயக்குனர் மணிரத்னம் ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய படங்களின் மூலம் அதை சாதித்துவிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சேர்த்து பான் இந்தியா என படம் எடுப்பதே பைத்தியக்காரத்தனம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அடுத்த கட்டுரையில்
Show comments