இயக்குநர் விக்ரமன் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நடிகர் அஜித், எல்லார் கிட்டயும், எப்பவுமே ஜென்டில் மேனத்தான் நடந்துக்குவார். நடிக்கிறப்ப டூப் போட்டு நடிக்கமாட்டார். முடிச்சவரைக்கும் எவ்வளவு ரிஸ்க்கான காட்சினாலும அவரே நடிச்சுடுவார்.
பைக் ரேஸில் கலந்துக்கிட்ட சமயத்துல , அஜீத்துக்கு மூன்று நான்கு முறை காயம் ஏற்பட்டது. அதுக்காக 36 தடவை ஆபரேஷன் நடந்திருக்கிறது அவருக்கு. ஆனாலும் அஜித், டூப் போடவே மாட்டார். போராடுகிற மனிதர் அவர். போராடிப் போராடித்தான் அஜித், இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்.
மற்றவர்களிடம் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வார். எத்தனையோபேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். அப்போதே, சத்தமில்லாமல் உதவி செய்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை, அஜித்தை இன்னொரு எம்.ஜி.ஆர். என்றுதான் சொல்லவேண்டும்" என்றார்.