எது பேசுனாலும் சர்ச்சையாகுது.. நான் கிண்டல் பண்ணி பேசல! – வாரிசு தயாரிப்பாளர் வேதனை!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (18:13 IST)
சமீபத்தில் வாரிசு படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வந்தது. அஜித் நடித்துள்ள துணிவும் அதே நாளில் வெளியாவதால் பெரும் போட்டி எழுந்துள்ளது

சமீபத்தில் இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் உதயநிதியை சந்தித்து பேசி கூடுதல் திரையரங்குகள் ஒதுக்க பேச உள்ளதாக கூறியிருந்தார். அப்போது அவர் விஜய்தான் தமிழின் நம்பர் 1 நடிகர் என கூறியிருந்தது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பேசி வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சையான பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள தில் ராஜூ “எதை பேசினாலும் சர்ச்சையாக்கி விடுகிறார்கள். 20 நொடி வீடியோவை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம். யாரையும் சிறுமைப்படுத்துவது என் நோக்கமல்ல. சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ஜப்பானிய நடனக் கலைஞர்!

யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார்!

இன்னும் விற்பனை ஆகாத முதல் பாக சேட்டிலைட் வியாபாரம்.. ஆனாலும் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு!

தில்லுக்கு துட்டு டைப் காமெடி ஹாரர் படமாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’… டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments