வைரமுத்துவை கழட்டி விட்டாரா மணிரத்னம் – பொன்னியில் செல்வனின் பாடலாசிரியர் யார் ?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (08:02 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் வைரமுத்து பெயர் இடம்பெறாதது குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

ரோஜா படம் முதல் மணிரத்னம் இயக்கும் படங்களில் எல்லாம் பாடல்களை எழுதுவது வைரமுத்துதான். இந்த கூட்டணி 25 ஆண்டுகளாக தமிழ் சினிமா இசை ரசிகர்களிடையே இசை ராஜ்ஜியம் நடத்தி வந்தது. மணி ரத்னம் இயக்கும் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் சோபித்ததில்லை.

இந்நிலையில் இப்போது மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்பு தொடங்கி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் விவரம் வெளியாகியுள்ள நிலையில் அதில் வைரமுத்து பெயர் இல்லை. இதனால் 27 வருடங்களாக இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி உடைந்துள்ளதாக என சந்தேகம்  எழுந்துள்ளது.

பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது மீடூ புகார் எழுப்பியதால்தான் அவர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments