Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபுவுக்கே தெரியாமல் ரிலீஸ் ஆனதா ஆர்கே நகர்? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (22:38 IST)
வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகிய ஆர்கேநகர் திரைப்படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த படம் பல்வேறு பொருளாதார சிக்கல் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது
 
கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் முடிவடைந்து ஒரு சில முறை ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திடீர் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர் 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் இந்த படம் ரிலீஸ் ஆகப் போவதாக அறிவிக்கப்பட்டு நேற்று இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் இந்த தகவல் வெங்கட்பிரபுவுக்கே தெரியாது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
உண்மையில் என்ன நடந்தது என்றால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டதாகவும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும், எனவே வெளியான இரண்டு மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் இந்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்றும் வெங்கட்பிரபு அனுமதி கொடுத்துள்ளார்
 
ஆனால் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் இந்த படம் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் நெட்பிளிக்ஸில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் கவனக்குறைவாக வெங்கட்பிரபு இருந்ததாகவும், நெட்பிளிக்ஸ் ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments