துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் விஜய் பட தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:50 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள கௌதம் மேனன், அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் இந்த படத்தைக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த லலித் தானே அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவிலேயே துருவ நட்சத்திரம் படத்துக்கு விடுதலை கிடைக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments