விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் –துருவ் விக்ரம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:14 IST)
நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் திரைப்படம் நேற்று ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் மகான் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்ட அவர் விஜய்யின் மகனின் சஞ்சய் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘சஞ்சய்யும் நானும் சிறுவயது முதலே நண்பர்கள். அவர் நல்ல கதையுடன் வந்தால் அதில் நடிக்க தயாராக இருக்கிறேன். அப்படி நடந்தால் பாலிவுட் போல வாரிசுகள் இணைந்து நடிக்கும் படமாக அது இருக்கும்’ எனக் கூறியுள்ளார். சஞ்சய் கனடாவில் திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்கம் சம்மந்தமான பட்டப்படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments