Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 7 மே 2024 (15:17 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” என அறிவித்தனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்து இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் ஆனதும் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை மலையாள தயாரிப்பாளரான ஷிபு தமீம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments