Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்லக்கி துருவ்: மீண்டும் தள்ளிப் போன ஆதித்ய வர்மா ரிலீஸ்!

அன்லக்கி துருவ்: மீண்டும் தள்ளிப் போன ஆதித்ய வர்மா ரிலீஸ்!
, புதன், 6 நவம்பர் 2019 (17:07 IST)
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா திரைபடம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான வர்மா என்ற திரைப்படம் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியது.  
 
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் வர்மா படத்தை ரிலீஸ் செய்ய மறுத்ததோடு இந்த படத்தை வேறொரு இயக்குனருடன் ஒப்படைத்து மீண்டும் உருவாக்க கோரினார். இதனையடுத்து இந்த படம் கிரிசாயா என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் உருவாகி வந்தது.  
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி திரைப்படம் நவம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 
 
ஆனால் தற்போது ஏ சான்றிதழ் பெற்றுள்ள ஆதித்ய வர்மா படம் நவம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலர்ஃபுல் உடையில் கேண்டிட் போஸ் - அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!