Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் நடிகராகக் களமிறங்குகிறாரா தோனி…மாதவனுடன் இணைந்து ஆக்‌ஷன் டீசர்!

vinoth
வியாழன், 11 செப்டம்பர் 2025 (14:53 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், பைக் சவாரி என மத்திய வயது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய 43 ஆவது வயதிலும் ஆடிவரும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த சீசனில் ருத்துராஜ் பாதியிலேயே காயம் காரணமாக விலக, கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார் தோனி.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ‘தி சேஸ்’ என்ற ஆக்‌ஷன் படத்தின் டீசர் வெளியானது. அதில் நடிகர் மாதவனுடன் தோனி கமாண்டோ போல உடையணிந்து தோன்றியிருந்தார். இதையடுத்து தோனி அந்த படத்தில் நடிக்கிறார என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது. ஆனால் தோனி அந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா அல்லது முழு நீள வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாலையில் நின்று சாப்பாடு.. பாபா குகையில் தியானம்! - மீண்டும் இமயமலையில் ரஜினி!

நான் விஜய்யின் தீவிர ரசிகை! கரூர் சம்பவம் குறித்து காஜல் அகர்வால் சொன்ன பதில்!

என் மனைவி இல்லாவிட்டால் ‘காந்தாரா’ படமே இல்லை: ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் மார்வெலஸ் க்ளிக்ஸ்!

சிவப்பு நிற உடையில் ஒய்யாரப் போஸில் அசத்தும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments