Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் மாரி-2 பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

தனுஷின் மாரி-2 பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
, திங்கள், 26 நவம்பர் 2018 (16:56 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
 

 



வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் வெடியுடன் இருக்கும் போஸ்டர் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.   
 
தற்போது இப்படத்திற்கு  தணிக்கைக் குழு  U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 
 
மாரி 2 படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி சாதனையை 1 மணி நேரத்தில் முறியடித்த அஜித்!