Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குபேரா படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் தனுஷ்!

குபேரா படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் தனுஷ்!

vinoth

, சனி, 29 ஜூன் 2024 (10:44 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த வாரத்தோடு தனுஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. மேலும் அதன் பிறகு ஒரு வாரத்தில் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட் பேட் அக்லி படத்துக்காக இந்த வெளிநாட்டுக்கு செல்லும் படக்குழு… அஜித் மேனேஜர் கொடுத்த அப்டேட்!