Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாலிவுட் இயக்குனரோடு இணையும் தனுஷ்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:40 IST)
தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் சமீபத்தில் வெளியான அத்ராங்கி ரே திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இதையடுத்து இப்போது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக அத்ராங்கி ரே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தை வெளியிட்ட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அத்ராங்கி ரே டிஸ்னியில் வெளியான படங்களிலேயே முதல்நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது என அறிவித்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து இப்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளார் தனுஷ். இந்த படம் முந்தைய இரண்டு படங்களைப் போல அல்லாமல் ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments