வில்லனாக நடிக்கவைக்க ஆசைப்பட்ட தனுஷ்… ஆனால் ‘அந்த’ காரணத்தை சொல்லி மறுத்த இசையமைப்பாளர் தேவா!

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (14:00 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50 ஆவது படமான ராயன் ஜூலை 26 ஆம் தேதி வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50 ஆவது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். படம் மிகப்பெரிய அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சினிமா ஆர்வலர்கள் இந்த படம் ஒரு உள்ளீடற்ற திரைப்படம் எனக் கடுமையாக விமர்சித்தனர். ஓடிடி ரிலீஸின் போது படம் கடுமையாக ட்ரால் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் இசையமைப்பாளர் தேவாவைதான் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம் தனுஷ். ஆனால் தன்னால் வசனங்களை மனப்பாடம் செய்து ஒழுங்காகப் பேச முடியாது என்பதை சொல்லி தேவா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments