Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாத்தி படத்தால் விரியும் தனுஷின் கேப்டன் மில்லர் வியாபாரம்!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:34 IST)
தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள படம் ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆன திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாத்தி திரைப்படம் 51 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரிபுதிரியான வெற்றியால் தனுஷுக்கு இப்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால் அவர் நடிப்பில் அடுத்து ரிலீஸாகவுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வியாபாரம் தெலுங்கில் அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உச்சபட்ச மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments