Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைந்து நடிக்கிறார்களா ப்ரதீப்பும் விஜய்சேதுபதியும்?... விக்னேஷ் சிவன் படம் பற்றி பரவும் தகவல்!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:28 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து உடனடியாக ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க விஜய் சேதுபதியோடு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சமீபத்திய ஹிட்டால் கவனம் பெற்றிருக்கும் லவ்டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் மற்றொரு தகவலின் படி இரண்டு பேரையும் தனித்தனி படங்களில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments