Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா கடவுள்… ரஜினிதான் ஒரே தலைவர்- தனுஷ் விளக்கம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:37 IST)
நடிகர் தனுஷ் இப்போது மும்பையில் முகாமிட்டு அத்ராங்கி ரே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இதையடுத்து இப்போது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக அத்ராங்கி ரே உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதற்காக இப்போது மும்பையில் முகாமிட்டுள்ள தனுஷ் அந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அதில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘ எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். அது ஒரு ஆத்மார்த்தமான செயல். ஆனால் என் அப்பாவுக்கோ நான் நடிகனாக வேண்டும் என்ற ஆசை. சாரா அலிகான் என்னை தலைவா என்று அழைத்து வருகிறார். தலைவர் என்றால் அது ரஜினிதான் என்றும் என்னை அப்படி அழைக்கவேண்டாம் என்றும் அவரிடம் லட்சம் முறை கூறிவிட்டேன். ரஜினி என் ஒரே தலைவர். இளையராஜா என் கடவுள்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments