Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியும் ராஜமௌலியும் அந்த சாதனையை செய்தனர்… தனுஷ் பாராட்டு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (10:17 IST)
திரைப்படங்களை வடக்கு தெற்கு எனப் பிரிக்காமல் இந்திய படங்கள் என்றே பார்க்கவேண்டும் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ், சாரா அலிகான் மற்றும் அக்‌ஷய்குமார் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள அத்ராங்கி ரே (தமிழில் – கலாட்டா கல்யாணம்) வரும் டிசம்பர் 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் கலந்துகொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘திரைப்படங்களை வடக்கு, தெற்கு எனப் பிரிப்பதை எப்போதும் நான் எதிர்க்கிறேன். அனைத்தையும் இந்தியப் படங்களாகதான் பார்க்கவேண்டும். தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் உலகளவில் பிரபலமாகிக் கொண்டு வருவது ஆரோக்யமானது. முதலில் அதனை சாத்தியமாக்கியவர் ரஜினிகாந்த். அவருக்கு ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார். அதன் பின்னர் பாகுபலி அந்த சாதனையை நிகழ்த்தியது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய நடிகையின் சகோதரி.. குவியும் பாராட்டுக்கள்..!

‘மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு நான் ஹிட் கொடுத்தேன்.. ஆனால் அவர்’ – சுந்தர் சி ஆதங்கம்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… டிரைலர் & பாடல் ரிலீஸ் அப்டேட்!

பிரியங்காவின் கணவர் வயது இவ்வளவுதானா? வயதானவர் என நினைத்து விட்டோமே..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments