Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச நடன ரியாலிட்டி ஷோவில் கலக்கிய மாரி பாடல்! இயக்குனர் பெருமிதம்!

Advertiesment
சர்வதேச நடன ரியாலிட்டி ஷோவில் கலக்கிய மாரி பாடல்! இயக்குனர் பெருமிதம்!
, திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:04 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படத்தின் பாடல் ஒன்றுக்கு சர்வதேச அரங்கில் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி. அதில் இடம்பெற்றுள்ள மாரி தர லோக்கல் என்ற பாடல் செம்ம ஹிட்டானது. அதில் தனுஷின் நடனமும் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் நடன ரியாலிட்டி ஷோவான காட் டேலண்ட் (got talent) என்ற நிகழ்ச்சிக்காக மும்பையைச் சேர்ந்த நடனக்குழுவினர் வீடியோ மூலமாக இந்த பாடலுக்கு நடனம் ஆடி கவனத்தைப் பெற்றுள்ளனர். இது சம்மந்தமாக இயக்குனர் பாலாஜி மோகன் அந்த வீடியோவைப் பகிர்ந்து ‘கில்லர் பர்ஃபாமன்ஸ்’ எனக் கூறி தனுஷையும் அனிருத்தையும் டேக் செய்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைஸ் ஜீரோவில் கீர்த்தி பாண்டியன்… இன்ஸ்டா புதுவரவு இவர்தான்!