Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் 51 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

vinoth
திங்கள், 22 ஜனவரி 2024 (07:49 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு முதலில் தமன் இசையமைப்பதாக இருந்தது.

ஆனால் இப்போது அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments