Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் இயக்கப்போகும் இரண்டாவது படம் எது தெரியுமா?

தனுஷ் இயக்கப்போகும் இரண்டாவது படம் எது தெரியுமா?
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (00:30 IST)
தனுஷ் இயக்கிய முதல் படமான பா.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று தனுஷை ஒரு நல்ல இயக்குனராகவும் அடையாளம் காட்டியது. இந்த நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் 'பா.பாண்டி' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று ஊகித்த நிலையில் தற்போது அவர் இயக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் இந்த படத்தைத்தான் தனுஷ் நடித்து இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் கடந்த 80களில் நடக்கும் வகையிலான ஒரு பீரியட் படம் என்றும் இந்த படம் குறித்த விரிவான விபரங்கள் மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்திலும், கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதன் பின்னர் பாலாஜி மோகனின் 'மாரி 2' படத்தில் நடித்து முடித்த பின்னர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இய்க்கி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா விஷ்ணுவர்தன்: டுவிட்டரில் சூசக தகவல்