Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ''வாத்தி'' பட ஆடியோ விழா தொடங்கியது...வைரலாகும் வீடியோ

vaathi
, சனி, 4 பிப்ரவரி 2023 (21:00 IST)
தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தொடங்கியுள்ளது.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  தற்போது சென்னை அடுத்து சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தற்போது, வாத்தி பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் தனுஷின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

இதில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய ‘வாத்தி’  படத்தில் தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹனிரோஸை பார்க்க குவிந்த ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ