தான் அறிவிக்கும்வரை ‘விஐபி 2’ படத்தின் பொய்யான ரிலீஸ் தேதியை யாரும் பரப்ப வேண்டாம் என தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார். இந்தப் படம், கடந்த மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளன்று வெளியாவதாக இருந்தது.
ஆனால், சென்சார் செய்யத் தாமதம் ஏற்பட்டதால், இந்த மாதத்திற்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படாததால், ஆளாளுக்கு ஒரு தேதியைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் தனுஷ். “ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தாழ்மையான வேண்டுகோள். ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி குறித்து ஊகத்தின் அடிப்படையில் எந்தச் செய்தியையும் வெளியிட வேண்டாம். இன்று மாலை 7 மணிக்கு நான் அறிவிக்கும்வரை அமைதி காக்கவும், நன்றி” எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.