Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘குபேரா’ ஷூட்டிங் நிறைவு… ரிலீஸ் எப்போது?

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (15:20 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது. மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் சில காட்சிகளை மட்டும் சமீபத்தில் ரி ஷூட் செய்தனர்.

இப்போது மொத்த படமும் முடிந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments