கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் பாதியில் நிற்கிறது. தனுஷ் கோபித்துக் கொண்டு போனதால்தான் படம் நிற்பதாக கூறுகிறார்கள்.
தான் தயாரிக்கும் படங்களில் தொழிலாளர்கள் தவிர மற்ற அனைத்து பேருக்கும் சம்பள பாக்கி வைப்பவர் கௌதம். சிலருக்கு மொத்த சம்பளமுமே பாக்கியாக நிற்கும்.
அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ளாததற்கு கௌதம் வைத்த சம்பள பாக்கிதான் காரணம். அதுபோல் தனுஷுக்கும் பேசியபடி சம்பளம் தரவில்லை. இவ்வளவு நாள் நடித்ததற்கு முதலில் பணத்தை செட்டில் செய்யட்டும், அப்புறம் நடிக்கிறேன் என்று தனுஷ் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஒரு படம் தொங்கலில் இருக்கும் நேரத்தில்தான் துருவநட்சத்திரத்தை தொடங்கினார் கௌதம்.
பாஸ் நீங்க மாறவே மாட்டீங்களா?