Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானே வருவேன் ஒளிப்பதிவாளர் வெளியேற்றம்… காரணம் தனுஷா?

Advertiesment
நானே வருவேன் ஒளிப்பதிவாளர் வெளியேற்றம்… காரணம் தனுஷா?
, வியாழன், 23 டிசம்பர் 2021 (15:40 IST)
ஒளிப்பதிவாளர் யாமினி நானே வருவேன் திரைப்படத்தில் இருந்து வெளியேறியதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சில நாட்களுக்கு முன்னதாக அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவர் செல்வராகவன் நடிகராக அறிமுகம் ஆன சாணிக்காயிதம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் அவருக்கு புதிதாக யார் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள உள்ளார் என்பதையும் படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் யாமினி படத்தில் இருந்து வெளியேற முக்கியக் காரணம் அந்த படத்தின் கதாநாயகன் தனுஷ்தான் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் தானாகவே படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர்’’ - கமல்ஹாசன் புகழாரம்