Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்-சன்பிக்சர்ஸ் இணையும் படத்தின் இயக்குனர் இவர்தான்!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (22:30 IST)
தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக நேற்று ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. ஒரு சிலர் சமூக வலைதளங்களில் சில இயக்குனர்களின் பெயர்களை கூறி அவர்கள் தான் இந்த படத்தின் இயக்குனர்கள் என்றும் கூறியிருந்தனர்
 
ஆனால் இந்த படத்தை இயக்குவது தனுஷ் தான் என்பது சற்று முன் தெரியவந்துள்ளது. தனுஷ் நடித்து இயக்கும் ஒரு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் ஏற்கனவே தயாரித்து வந்தது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த படம் பொருளாதார பிரச்சினையால் திடீரென்று நின்று போனது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தற்போது விலைக்கு வாங்கி உள்ளதாகவும், தற்போது இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் தொடர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே தனுஷ் 44 படத்தின் இயக்குனர் தனுஷ் தான் என்பது தற்போதைய செய்தி என்பதும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments