தனுஷ் ஒரு பல்துறை வித்தகர்… ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இதெல்லாம் நடக்கும்- புகழ்ந்து தள்ளிய அருண் விஜய்!

vinoth
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (15:35 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து பிப்ரவரி 21 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் அருண் விஜய் தனுஷின் திறமையை வியந்து பேசியுள்ளார். அதில் “தனுஷ் பல திறமைகள் கொண்டவர். ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். இன்னொரு நாள் கேரவனில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷோடு இணைந்து ரெக்கார்டிங்கில் இருப்பார். அவரின் திறமைகள் கண்டிப்பாக உத்வேகம் அளிக்கக் கூடியவை” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments