Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் நடிக்கும் ’வாத்தி’ படத்தின் புதிய போஸ்டர்: ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து

dhanush vaathi
, திங்கள், 24 அக்டோபர் 2022 (10:44 IST)
தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தை தீபாவளி போஸ்டர் வெளியாகியுள்ளது
 
அதில் தனுஷின் ஆக்ஷன் காட்சிகள் உள்ளதை அடுத்து அந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். டிசம்பர் இரண்டாம் தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.   தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
 
Edited by Siva
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து கேரக்டர்களில் சூர்யா… சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!