Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் இணைகிறாரா தனுஷ்?... ரஸ்ஸோ பிரதர்ஸுடன் பேச்சுவார்த்தை?

vinoth
புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:13 IST)
தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான தனுஷ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய பிற மொழிகளிலும் இப்போது நடித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக அவர் 2022 ஆம் ஆண்டு வெளியான தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நெட்ப்ளிக்ஸில்  நேரடியாக வெளியான இந்த படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உலக அளவில் தி க்ரே மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபற்றி பேசிய இயக்குனர்கள் தனுஷின் கதாபாத்திரத்தை மட்டும் டெவலப் செய்து தனியாக ஒரு படம் இயக்கும் எண்ணம் உள்ளதாக ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது அவர்கள் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தில் தனுஷுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைக் கொடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவர்கள் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments