ஓடிடி ரிலீஸில் சாதனைப் படைத்த தனுஷின் இட்லி கடை..!

vinoth
வியாழன், 6 நவம்பர் 2025 (12:02 IST)
தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ‘இட்லி கடை’ கடந்த ஒன்றாம் தேதி ஆயுதபூஜை அன்று ரிலீஸானது.  தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகி இருந்த ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அந்நேரத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்ற நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் இட்லி கடை படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ள நிலையில் அதன் அமெச்சூரானக் காட்சிகள் மற்றும் பிற்போக்குத்தனமான கதையமைப்பு ஆகியவற்றுக்காக அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த படம் ஐந்து நாட்களில் மட்டும் 5.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமீபத்தில் ரிலீசான பவன் கல்யாணின் பிளாக்பஸ்டர் ஹிட் ஓஜி படத்தின் பார்வைகளை விட அதிகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேக்குறவன் கேனையா இருந்தா.. நான் மிரட்டினேனா? - ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ!

VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments