இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (08:11 IST)
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக தனுஷ் இருந்தாலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் செப்டம்பர்14 ஆம் தேதி நடக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீப்காலமாக தனுஷ் இசை வெளியீட்டு விழாக்களில் தன்னைப் பற்றிய சோகக் கதைகளை சொல்ல அது ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷின் பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments