Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

vinoth
திங்கள், 2 ஜூன் 2025 (08:22 IST)
வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கேள்வியெழுப்பி ஆர்வத்தை வெளியிட்டு வந்தனர்.

இதற்கிடையில் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ படம் வராது என்பதை சூசகமாக சில நிகழ்ச்சிகளில் கூறிவந்தார். இந்நிலையில் இப்போது குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் ’வடசென்னை 2’ படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த படம் ‘வடசென்னை 2’ ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments