நடிகர் தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்துக்காக அவர் தேசிய விருது பெற்றார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அசுரன். அந்த படத்துக்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் தேசிய விருதைப் பெற்றனர். இந்நிலையில் இப்போது அசுரன் படத்துக்காக மேலும் ஒரு விருதை தனுஷ் பெற்றுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வந்த 52-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற BRICS திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த படங்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டன.