Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பட தயாரிப்பாளர் முக்கிய அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (20:15 IST)
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு கர்ணன் படத்தின் முக்கிய அப்டே நாளை 11 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டிற்கான ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எனவே கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஜனவரி 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு  அனைவரும் எதிர்ப்பார்த்துள்ள கர்ணன் பட டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இதுகுறித்து டூவிட் பதிவிட்டுவருகின்றனர். நாளைக்கு தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்ய திட்டமிட்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்