Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் பட நாயகி பரபரப்பு புகார்: சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்!

தனுஷ் பட நாயகி பரபரப்பு புகார்: சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்!

Advertiesment
தனுஷ் பட நாயகி பரபரப்பு புகார்: சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்!
, ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (10:00 IST)
சமீபத்தில் கேரளாவில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல நடிகைகள் தாங்களும் இது போன்று பல பாலியல் பிரச்சனைகளை சந்தித்ததாக தைரியமாக கூற ஆரம்பித்தனர்.


 
 
இந்நிலையில் தமிழ், மலையாளம் மொழிகளில் நடிக்கும் நடிகை பார்வதி மேனன் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். இவர் தமிழில் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார். மேலும் பூ, பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்த பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
 
சமீபத்தில் பார்வதி மேனன் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்புகள் தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது நடந்தது தமிழகத்தில் இல்லை, மலையாள சினிமா உலகில் என கூறியுள்ளார் பார்வதி.
 
சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் என்னிடம் நேரடியாகவே கேட்பார்கள். மலையாள சினிமாவில் பல முறை நான் இதை சந்தித்துள்ளேன். சினிமா என்றால் அப்படித்தான் இருக்கும் என கூறி அழைப்பார்கள். அந்த வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். இப்படித்தான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம். நடிப்பை தவிர வேறு வேலை இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எவ்வளவு பெரிய முட்டாள்? - இளம் இயக்குனரின் மனக்குமுறல்