ரஜினியுடன் ஒரே மேடையில் விருது வாங்கியது மகிழ்ச்சி – தனுஷ் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:52 IST)
இன்று திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதேபோல நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றது குறித்து பேசிய நடிகர் தனுஷ் “சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்து வியந்தவர் ரஜினிகாந்த். அவர் தாதா சாகேப் விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments