Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல விநியோக நிறுவனம்!

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல விநியோக நிறுவனம்!
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:21 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

படம் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்போது படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை பிரபல் வெளியீட்டு நிறுவனமான கே ஆர் ஜி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்துக்கு சென்சாரில் 13 இடங்களில் கட்…!