Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பை முடித்த அத்ராங்கி படக்குழுவினர்… தனுஷ் பகிர்ந்த புகைப்படம்!

படப்பிடிப்பை முடித்த அத்ராங்கி படக்குழுவினர்… தனுஷ் பகிர்ந்த புகைப்படம்!
, திங்கள், 29 மார்ச் 2021 (12:27 IST)
நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ள அத்ராங்கி டே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்றது. இந்த படத்துக்கான தனது காட்சிகளை தனுஷ் ஏற்கனவே முடித்துவிட்டு அமெரிக்காவில் நடக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதை தனுஷ் அறிவித்துள்ளார். இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசைக்கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர்!