Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை விழாவில் தனுஷ் & அனிருத் கச்சேரி!

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை விழாவில் தனுஷ் & அனிருத் கச்சேரி!
, வெள்ளி, 29 ஜூலை 2022 (17:46 IST)
திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீடு நாளை சென்னையில் நடக்க உள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படத்தை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் தனுஷ் இதை சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து படத்தின் இசை வெளியீடு நாளை நடக்க உள்ளது. இந்த விழாவில் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இசை கச்சேரி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரின் ஹிட் பாடல்கள் இதில் அரங்கேற்றப்படும் என சொல்லப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ''ஜெயிலர்'' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!