ஒரே தயாரிப்பாளருக்கு படம் நடிக்கும் தனுஷ் & சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:25 IST)
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக்கியதில் தனுஷின் பங்கு மிக முக்கியமானது. அவரை வைத்து எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை தயாரித்தார். அந்த இரு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தங்கள் பாதையை வகுத்துக் கொண்டனர்.

இதனால் ஒரே மேடையில் கூட சமீபகாலமாக அவர்கள் தோன்றுவதில்லை. இந்நிலையில் ஒரே தயாரிப்பாளருக்கு இருவரும் ஒரே நேரத்தில் படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் படத்தையும் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் நடிக்கும் புதுப்படத்தையும் ஒரே தயாரிப்பாளர்தான் தயாரிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments