மீண்டும் இணையும் தனுஷ்-சமுத்திரக்கனி: தயாரிப்பு நிறுவனம் தகவல்!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தனுஷ் நடித்த விஐபி மற்றும் விஐபி 2 ஆகிய இரண்டு படங்களிலும் சமுத்திரகனி நடித்து இருந்தார் என்பதும் இந்த இரண்டு படங்களிலும் இருவரும் தோன்றும் காட்சிகள் படத்தில் சுவாரசியமாக இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
									
										
			        							
								
																	
	 
	இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை என்ற படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் சமுத்திரகனி நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'D43' திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் 
 
									
											
									
			        							
								
																	
	 
	தனுஷ், சமுத்திரக்கனி மீண்டும் இணையும் இந்த தகவலை சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 30 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	முதல்கட்டமாக இந்த படத்தின் ஓபனிங் பாடல் பாடலின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது