Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 படங்களுக்குப் பின் இணைந்த தனுஷ் & அனிருத்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:20 IST)
நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் மீண்டும் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத்தி சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ். அவர்கள் கூட்டணியில் உருவான 3 படக் கூட்டணியில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின. அதன் பின்னர் தனுஷோடு பல படங்களில் அவர் பணிபுரிந்தார். எல்லா பாடல்களுமே ஹிட்டாகின.

ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு எழுந்து பிரிந்தனர். கடைசியாக தங்கமகன் படத்தில்தான் பணிபுரிந்தனர். அதன் பின்னர் தனுஷ் 16 படங்களில் அனிருத் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டார். இந்நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் படத்தில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments