Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளருக்கு 10 கோடியைத் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்ட தனுஷ்!

vinoth
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:27 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்குக் காரணம் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு அதற்குப் படம் நடித்துக் கொடுக்கவில்லை என்பதும் தேனாண்டாள் முரளி தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி பாதி ஷூட்டிங் நடந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதும் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் தனுஷ், பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்துக்கு வட்டியோடு சேர்த்து 10 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு புதிய படம் ஒன்றில் நடித்துக் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments