Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் 50 படத்தில் இருந்து விலகிய பிரபல ஹீரோ!

தனுஷ் 50 படத்தில் இருந்து விலகிய பிரபல ஹீரோ!
, சனி, 17 ஜூன் 2023 (10:31 IST)
பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ், அடுத்து இயக்குனராகும்  படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனுஷின் தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவர் விலகி அவருக்கு பதிலாக சந்தீப் கிஷன் அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா,  காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் மீண்டும் தங்கலான் ஷூட்டிங்!