Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படம் தள்ளிப்போனது ஏன்? தவிக்கும் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (15:52 IST)
சென்சார் ஆகியும் படத்தின் ரிலீஸைத் தள்ளிவைத்த காரணம் தெரியாமல் தவித்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.


 


செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. 2014ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஆகஸ்ட் மாதத்துக்கு ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர். படம் சென்சார் ஆகியும் ரிலீஸைத் தள்ளி வைத்தது ஏன் என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments