Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள்: அஜித்துக்கு முக்கிய விருது!

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள்: அஜித்துக்கு முக்கிய விருது!
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (20:35 IST)
2020ஆம் ஆண்டின் தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருது அறிவிப்பில் டூலெட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் ராட்சசி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது  என்பதும், ஒத்த செருப்பு படத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வாரம் ரம்யா தப்பிச்சுட்டாங்களா? ஆரி ரசிகர்கள் அதிர்ச்சி!