Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்!

vinoth
திங்கள், 25 நவம்பர் 2024 (09:38 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன. இன்னும் ஒருவாரத்தில் மொத்தக் காட்சிகளும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருந்த தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையே புஷ்பா 2 இசை சம்மந்தமாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதை அவர் புஷ்பா 2 மேடையிலேயே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் இருந்தும் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments