Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகையோடு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் திருமணமா?

பிரபல நடிகையோடு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் திருமணமா?
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:55 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராக iருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் இவர் இசையமைத்த வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை, வீரம் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

தற்போது அவர் சூர்யா 42 படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிகை பூஜிதாவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதை பூஜிதா மறுத்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தான் தேவி ஸ்ரீ பிரசாத்தை டேட்டிங் கூட செய்ததில்லை என்று பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோப்ரா தோல்வியால் உச்சகட்ட கடுப்பில் தயாரிப்பாளர்… எடுக்கப் போகும் அதிரடி முடிவு!