காதல் கோட்டை இரண்டாம் பாகத்துக்கு நான் தயார்… தேவயானி போட்ட கண்டீஷன்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:01 IST)
காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் அது சம்மந்தமான கொண்டாட்டங்களை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் தேசிய விருது பெறுகிறார் என்றால் அது காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன் காதல் கோட்டை திரைக்கதைக்காக பெற்றதுதான். வழக்கமாக தேசிய விருது பெற்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடாது என்ற எண்ணத்தை விரட்டி அடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் காதல் கோட்டை.

இந்த படத்தின் மூலம் அஜித் மற்றும் தேவயாணி ஆகியோர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். இப்போது அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட நடிகை தேவயானி ‘இயக்குனர் அகத்தியன் இயக்கினால் காதல் கோட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்க நான் தயார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments